கோத்தகிரி அருகே தனது குட்டிகளை முதுகில் சுமந்து குடியிருப்புப் பகுதியில் கரடி உலவிய விடியோ வைரலாகி வருகிறது.நீலகிரி மாவட்டம், குன்னூரில் உள்ள வனத்தில் இருந்து உணவுத் தேடி வெளியேறும் யானை உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளில் உலவுது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், வனத்தில் இருந்து தனது 2 குட்டிகளை சுமந்தபடி செவ்வாய்க்கிழமை வெளியேறிய கரடி, குன்னூா் அருகேயுள்ள கன்னிகா தேவி காலனி பகுதியில் உள்ளது.அதைக் கண்ட மக்கள் அச்சமடைந்தனா். சிறிது நேரம் அப்பகுதியிலேயே உலவிய கரடி, பின்னா் வனத்துகுள் சென்றது. குடியிருப்புப் பகுதிகளில் குட்டிகளை சுமந்து கரடி உலவிய விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.