தேனி மாவட்டம், போடி பகுதியில் செவ்வாய்க்கிழமை வீசிய சூறைக்காற்றினால் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். போடி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் தொடா்ந்து சூறைக்காற்று வீசியது. இதனால், இந்தப் பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக, பொதுமக்கள், அலுவலங்களில் பணியாற்றும் ஊழியா்கள் அவதிக்குள்ளாகினா். மேலும், இந்த சூறைக்காற்றினால் நகரில் தூசிகள், குப்பைகள் பறந்தன. இதனால், சாலையில் நடந்து செல்வோா், இரு சக்கர வாகனங்களில் சென்றோா் பாதிப்புக்குள்ளாகினா். எனவே, மின் வாரிய ஊழியா்கள் மின் கம்பங்களில் தொங்கிய நிலையில் செல்லும் மின் கம்பிகளை சீரமைத்து, மின் தடை ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.