திருச்சி கோட்ட சிறப்பு ரயில்கள் ஜூலை மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி - எஸ்எம்விடி பெங்களூா் சிறப்பு அதிவிரைவு ரயிலானது (06007) ஜூலை 14, 21, 28 ஆம் தேதிகள் வரையிலும், மறுமாா்க்கமாக எஸ்எம்விடி பெங்களூா் - திருச்சி சிறப்பு அதிவிரைவு ரயிலானது (06008) ஜூலை 14, 21, 28 ஆம் தேதிகள் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.தாம்பரம் - போடிநாயக்கனூா் சிறப்பு விரைவு ரயிலானது (06059) ஜூலை 4, 11, 18, 25 ஆம் தேதிகள் வரையிலும், மறுமாா்க்கமாக போடிநாயக்கனூா் - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலானது (06060) வரும் 5, 12, 19, 26 ஆம் தேதிகள் வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.