பிகாரில் நடைபெறவுள்ள பங்கிபூர் சட்டப்பேரவைத் தொகுதியின் இடைத்தேர்தலில், ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் போட்டியிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிகாரில் பங்கிபூர் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக தேசிய தலைவர் நிதின் நபீன் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தார். இதனைத் தொடர்ந்து, காலியாக அறிவிக்கப்பட்ட பங்கிபூர் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் ஜூலை 30 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் இன்று (ஜூலை 2) அறிவித்துள்ளது. இந்த நிலையில், முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் பங்கிபூர் தொகுதியில் போட்டியிடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அந்தத் தொகுதியில் போட்டியிடவுள்ள வேட்பாளர் குறித்து வரும் ஜூலை 5 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, பிகாரில் கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் புதியதாகப் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது. தீவிரமடையும் திரிணமூல் உள்கட்சி மோதல்! சின்னம், பெயருக்கு உரிமைகோரும் அதிருப்தி பிரிவு! Prashant Kishor, leader of the Jan Suraaj party, is set to contest the upcoming by-election for the Bankipur Assembly constituency in Bihar.