சென்னை ஐஐடியில் நாளை (ஜூலை 3) தொடங்குகிறது சர்வதேச கல்விசார் மாநாடு!

Wait 5 sec.

நிதிச்சந்தைகள், பெருநிறுவன நிதி குறித்த 3 நாள்கள் சர்வதேச கல்விசார் மாநாடு சென்னை ஐஐடியில் நாளை (ஜூலை 3) தொடங்கவுள்ளது.மூன்று நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டை நாட்டிலுள்ள அனைத்து ஐஐடிக்கள் இணைந்து நடத்துகின்றன.இந்தியா அளவிலும் சர்வதேச அளவிலிருந்தும் வரும் கல்வியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், ஒழுங்குமுறை அமைப்பின் பிரதிநிதிகள், தொழில் துறைத் தலைவர்கள், நிதி-தொழில்நுட்பாளர்கள் (ஃபைன் டெக்), ஆராய்ச்சியாளர்கள், துறைசார் வல்லுநர்கள், சுயாதீன ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரை இந்த மாநாடு ஒன்றிணைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சுமார் 650-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இந்த மாநாட்டில் வெளியிடும் வகையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. முதலீட்டு உத்திகள் மற்றும் சொத்து மேலாண்மை, சந்தை போக்குகள் மற்றும் முன்னறிவிப்பு, வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு, எண்ம சொத்துக்கள் விவகாரங்களில் 376 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இந்தக் கட்டுரைகள் மதிப்பாய்வுக் குழுவால் ஆய்வாளர்கள் மதிப்பாளர்கள் அடையாளம் வெளிப்படுத்தாமல் செயல்முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் 293 கட்டுரைகள் வாய்மொழி விளக்கக் காட்சிகளுக்கும், 83 கட்டுரைகள் போஸ்டர் விளக்கக் காட்சிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சென்னை ஐஐடி மேலாண்மை ஆய்வுகள் துறையின் பேரா. எம். தேன்மொழி வரவேற்புரையுடன் இம்மாநாடு தொடங்குகிறது. இதன் தொடக்க விழாவில், கலிபோர்னியா பல்கலைக்கழக ஆண்டர்சன் மேலாண்மைப் பள்ளியின் நிதித்துறை சிறப்புப் பேராசிரியர் அவனிதர் சுப்ரமணியம் முதல் நாள் நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, "உணர்வுசார் முதலீடு மற்றும் அதீத தன்னம்பிக்கையுடன் கூடிய சொத்து விலை நிர்ணயம் கோட்பாடு மற்றும் சான்றுகள்' குறித்து உரையாற்றுகிறார். இரண்டாம் நாளில் லண்டன் இம்பீரியல் கல்லூரி நிதிப் பொருளாதார பேராசிரியர் தருண் ராமதுரை, "குடும்ப நிதி' குறித்து பேசுகிறார். மூன்றாம் நாள் முக்கிய பேச்சாளராக நியூயார்க் ஸ்டெர்ன் வணிகப் பள்ளி பேராசிரியர் விரல் ஆச்சார்யா, "செயற்கை நுண்ணறிவு மற்றும் உற்பத்தித்திறன்: புத்தாக்கத்தின் பங்கு' என்கிற கருத்தில் பேசுகிறார்.முக்கிய உரை அமர்வுகளுடன் கூடுதலாக, முனைவர் பட்ட ஆய்வாளர்கள், தொடக்கநிலை ஆராய்ச்சியாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிலரங்குகள் ஆகியவையும் இம்மாநாட்டில் நடைபெறுகிறது. 3 நாள்கள் சர்வதேச கல்விசார் மாநாட்டு நிகழச்சி நிரல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்An international academic conference begins tomorrow at IIT Madras