வாட்ஸ்ஆப் எண்ணுக்கு பதிலாக யூசர்நேம் அம்சம் கொண்டுவருவதற்கான காரணம் குறித்து மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு கேள்வி எழுப்பியுள்ளது.வாட்ஸ்ஆப்பில் 'யூசர் நேம்' (User name) எனும் பயனாளர் பெயர் இடம்பெறும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. இதன் மூலமாக மொபைல் எண் தெரியாமலேயே ஒரு பயனர் மற்றொருவருக்கு மெசேஜ் செய்யலாம் என மெட்டா தெரிவித்துள்ளது.இதனிடையே வாட்ஸ்ஆப் எண்ணுக்கு பதிலாக யூசர்நேம் பயன்படுத்துவது இணையவழிக் குற்றங்கள் மற்றும் மோசடிகளுக்கு வழிவகுக்கும் என மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.மேலும் இது தொடர்பாக 3 நாள்களுக்குள் விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.உலகளவில் 330 கோடிக்கும் (3.3 பில்லியன்) அதிகமான மக்கள் வாட்ஸ்ஆப் செயலியைப் பயன்படுத்துகின்றனர். இந்தச் செயலி 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவில் மட்டும் 85 கோடிக்கும் அதிகமானோர் வாட்ஸ்ஆப் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்.இதனிடையே வாட்ஸ்ஆப்பில் எண்ணுக்கு பதிலாக யூசர் நேம் பயன்படுத்தி, கணக்கை செயல்பாட்டில் வைத்திருக்கும் அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் மற்ற பயனர்களுக்கோ அல்லது குழுவுக்கே மெசேஜ் அனுப்பும்போது, நமது எண் மற்றவர்களுக்கு தெரியாது. மாறாக யூசர்நேம் மட்டுமே காண்பிக்கும். இந்த அம்சத்தை இந்தியாவிலும் வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில், மெட்டா நிறுவனத்தின் இந்த அம்சம் இணையவழிக் குற்றங்களுக்கு வழிவகுக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் இணையவழி மோசடிகள், ஃபிஷிங், டிஜிட்டல் கைது, ஆள்மாறாட்டத் தாக்குதல் போன்றவற்றை எளிதாக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதனால் வாட்ஸ் ஆப்பில் எண்களுக்கு பதிலாக யூசர்நேம் அம்சத்தை கொண்டுவந்ததற்கான நோக்கம் மற்றும் விரிவான விளக்கம் அளிக்குமாறு மெட்டா நிறுவனத்துக்கு மத்திய அரசு 3 நாள்கள் கெடு விதித்துள்ளது.இனி கூகுள் தேவையில்லை... முகநூலில் ஏஐ வசதி! என்னென்ன சிறப்புகள்?WhatsApp username feature may increase cases of online fraud, phishing, digital scams Govt to Meta