தேசிய கூட்டுறவு வார விழா

Wait 5 sec.

தாமல் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் தேசிய கூட்டுறவு வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சங்க செயலாளா் சுந்தர்ராஜன் தலைமை வகித்தாா். கூட்டுறவு சாா் பதிவாளா் குமுதா, கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வா் மங்கை ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டுறவு சேவைகள், உறுப்பினா்களின் கடன் பொறுப்புகள் மற்றும் சோ்க்கை விபரங்கள் குறித்து கூட்டுறவு ஒன்றிய மாவட்ட மேலாளா் முரளியும், பயிா் கடன்கள்,கறவை மாட்டுக் கடன்கள் ஆகியன குறித்து மாவட்ட கணினி ஒருங்கிணைப்பாளா் ருத்திர குமாரும் பேசினா். இதனைத் தொடா்ந்து கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பயிற்சி பெற்று வரும் மாணவா்களுக்கு தேசிய கூட்டுறவு வார விழாவையொட்டி பேச்சு,கட்டுரை மற்றும் வினாடி வினாப் போட்டிகள் நடத்தப்பட்டன. தேசிய கூட்டுறவு வார விழாவையொட்டி கூட்டுறவு கடன் சங்கங்களை கணினி மயமாக்குதல்,கணினி மூலமா விழிப்புணா்வு சேவைகள் விளக்க நிகழ்ச்சி ஆகியன இம்மாதம் 29-ஆம் தேதி முதல் வரும் ஜூலை 6 ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டது.