ராயல் என்ஃபீல்ட் விற்பனை 27% அதிகரிப்பு!

Wait 5 sec.

மும்பை: ராயல் என்ஃபீல்டு பைக்குகள் இந்தியாவில் 350சிசி மோட்டார் சைக்கிள் பிரிவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.ராயல் என்ஃபீல்ட், இந்திய சந்தையில் தொடர்ந்து வலுவான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 89,540 பைக்குகள் விற்பனையான நிலையில், இந்த ஆண்டின் ஜூன் மாத விற்பனை 27% உயர்ந்து 1,14,032 வாகனங்களாக அதிகரித்துள்ளது.மேலும், இக்காலகட்டத்தில், தனது முதல் மின்சார மோட்டார் சைக்கிளான 'ஃப்ளையிங் ஃப்ளீ சி6' மாடலை பெங்களூருவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளதாக கூறியுள்ளது.பல்வேறு சந்தைகளில் எங்களின் மேம்படுத்தப்பட்ட தயாரிப்புகளுக்குக் கிடைத்துள்ள சிறப்பான வரவேற்பால், எங்களின் ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சிப் பாதையைத் தொடர்ந்து தக்க வைத்துள்ளோம் என்றார் ஐச்சர் மோட்டார்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுமான கோவிந்தராஜன்.முதல் மின்சார மோட்டார் சைக்கிளுக்குக் கிடைத்து வரும் வரவேற்பு மிகவும் ஊக்கமளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் இந்த விற்பனை வேகத்தைத் தக்கவைத்துக் கொள்வதில் நாங்கள் உறுதியோடு இருக்கிறோம் என்றார் கோவிந்தராஜன்.Royal Enfield on Wednesday reported a 27 per cent growth in total sales in June 2026.டாடா மோட்டார்ஸ் வாகன விற்பனை 35% அதிகரிப்பு!