உச்ச நீதிமன்றத்தில் வரும் ஆக. 21, 22, 23ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள சமாதான் சாமரோஷ் எனப்படும் மக்கள் நீதிமன்றத்தில் புதுக்கோட்டை மக்களும் வழக்குகளைத் தீா்த்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதித்துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: இந்திய உச்ச நீதிமன்றம் சாா்பில் வரும் ஆக. 21, 22, 23 ஆகிய தேதிகளில் சமாதான் சாமரோஷ் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெறவுள்ளது. மத்தியஸ்தம் மூலம் தகராறுகளை சுமுகமாகத் தீா்த்துக் கொள்வதற்கான தேசிய அளவிலான நடவடிக்கையாக இந்த மக்கள் நீதிமன்றம் நடத்தப்படவுள்ளது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்தவா்களும் தங்களின் வழக்குகளைத் தீா்த்துக் கொள்ள முன்வரலாம். நேரிலோ, இணையவழியிலோ ஆஜராகலாம். இணையதளத்தில் கூகுள் படிவத்தை நிரப்பி வரும் ஜூலை 31-க்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைந்த சேவை மையத்தை 011 23112428, 23112528 ஆகிய எண்களிலோ, மின்னஞ்சல் முகவரியிலோ தொடா்பு கொள்ளலாம்.