மொழித்திறனை வளர்க்க உதவும் சாட்ஜிபிடியின் புதிய அம்சம்!

Wait 5 sec.

சாட்ஜிபிடியில் மொழித்திறனை வளர்த்துக் கொள்வதற்காக அட்வான்ஸ் வாய்ஸ் மோட் என்ற வசதி சோதனையில் உள்ளது.ஓபன்ஏஐ என்பது அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு முன்னணி செய்யறிவு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும்.இந்த நிறுவனத்தின் செய்யறிவு சாதனமான சாட் ஜிபிடி உலகளவில் 100 கோடிக்கும்அதிகமான மாதாந்திரப் பயனர்களைக் கொண்டு, மிக வேகமாக வளர்ந்து வரும் முன்னணி செய்யறிவு தொழில்நுட்பமாக உள்ளது.இந்த செய்யறிவு செயலியில் புதுப்புது அப்டேட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தற்போது சோதனையில் உள்ளதுதான் அட்வான்ஸ் வாய்ஸ் மோட் வசதி.இந்த வசதியில் மனிதர்களுடன் பேசுவது போல சாட் ஜிபிடியுடன் பயனர்கள் உரையாடலாம். அதாவது, தற்போதுள்ள நடைமுறையில் நாம் பேசி முடித்த பிறகுதான் சாட்ஜிபிடி அதற்கு பதிலளிக்கும். ஆனால், அட்வான்ஸ் வாய்ஸ் மோட் வசதியில் நாம் பேசப்பேச சாட்ஜிபிடி அதற்கு பதிலளிக்கும். ஒரு தலைப்பில் பேசிக் கொண்டிருக்கும் போது, மற்ற தலைப்பைப் பற்றி கேட்டால் அதற்கும் பதிலளிக்கும்.இதன்மூலம், நேர்காணல்களுக்குப் பயிற்சி எடுத்தல், மொழிகளைக் கற்றல் மற்றும் பேச்சுத்திறன் வளர்த்தல் போன்ற திறன்களை மிக எளிதாக வளர்த்துக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.இந்த அம்சம் தற்போதைக்கு ப்ளஸ், டீம், எண்டர்பிரைஸ் மற்றும் கல்வி போன்ற பயனர்களின் செயலிகளில் கிடைக்கிறது. சோதனை முடிந்தபிறகு அனைத்து விதமான பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மின்னஞ்சல்களை ஒரு முறை மட்டும்தான் படிக்க முடியும்!கான்பிடென்ஷியல் மோட் பற்றித் தெரியுமா?The 'Advanced Voice Mode' feature is currently being tested on ChatGPT to enhance language capabilities.