வெனிசுவேலா நிலநடுக்கத்தில் சேதமடைந்த கட்டட இடிபாடுகளில் இருந்து 6 நாள்களுக்குப் பிறகு 3 வயது குழந்தை உயிருடன் மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெனிசுவேலா நாட்டில் கடந்த புதன்கிழமை (ஜூன் 24) அன்று அடுத்தடுத்து ஏற்பட்ட 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவுகளிலான நிலநடுக்கங்களால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்தப் பேரிடரால், வெனிசுவேலா நாட்டில் இதுவரை 1,943 பேர் பலியானதாகவும், 10,000-க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இடிபாடுகளில் சிக்கி மாயமானவர்களைத் தேடும் பணிகள் 6 ஆவது நாளான இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், நிலநடுக்கத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட லா குவைரா மாநிலத்தில் சேதமடைந்த கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 3 வயது சிறுவனான க்லீபர் மோரான் சுமார் 6 நாள்களுக்குப் பிறகு இன்று (ஜூலை 1) ஜோர்டானிய மீட்புப் படையினரால் பத்திரமாக மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட குழந்தைக்கு முதலுதவிகள் வழங்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தலைநகர் கராகஸில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னதாக, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுவேலா நாட்டுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ள இந்தியா, கத்தார், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.அமெரிக்கா - ஈரான் இடையே கத்தாரில் மறைமுகப் பேச்சுவார்த்தை! a 3-year-old child was rescued alive from the rubble left by the earthquake in Venezuela after six days.