இது பீஸ்ட் மோட்... மெஸ்ஸி, எம்பாப்பே, ரொனால்டோவை முந்திய எர்லிங் ஹாலண்ட்!

Wait 5 sec.

நார்வே கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 60 கோல்களை நிறைவு செய்து உலக சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் டெக்ஸாஸ் அர்லிங்டனில் டல்லாஸ் கால்பந்து திடலில் நேற்றிரவு (ஜூன் 30) நடைபெற்ற போட்டியில் நார்வே மற்றும் ஐவரிகோஸ்ட் ஆகிய அணிகள் மோதின. இதில் நார்வே 2-1 என்ற கோல்கள் கணக்கில் த்ரில் வெற்றி பெற்றது.இந்தப் போட்டியில் நார்வே அணியின் நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் 86ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். இத்துடன் இந்த உலகக் கோப்பையில் ஹாலண்ட் 5 கோல்கள் அடித்துள்ளார். இந்த வெற்றியுடன் நார்வே தனது முதல் நாக் அவுட் வெற்றியைப் பெற்றுள்ளது. போட்டிக்குப் பிறகு மீண்டும் அணியினர் வைக்கிங் ரோ கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இத்துடன் சர்வதேச அளவில் 60 கோல்களை அதிவேகமாக நிறைவுசெய்த முதல் வீரராக சாதனை படைத்துள்ளார். முன்னதாக, புஸ்கஸ் 63 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டியிருந்ததே முதலிடத்தில் இருந்தது. மொத்தமாக எர்லிங் ஹாலண்ட் 260 கோல்கள் அடித்துள்ளார். ரொனால்டோ, மெஸ்ஸி, எம்பாப்பேவின் சாதனைகளை அடித்து நொறுக்கும் வீரராக ஹாலண்ட் வளர்ந்து வருகிறார். 1. எர்லிங் ஹாலண்ட் - 53 போட்டிகளில் 60 கோல்கள் 2. ஃபெரெங்க் புஸ்காஸ் - 63 போட்டிகளில் 60 கோல்கள்3. கிளியன் எம்பாப்பே - 101 போட்டிகளில் 60 கோல்கள்4. லியோனல் மெஸ்ஸி - 122 போட்டிகளில் 60 கோல்கள்5. கிறிஸ்டியானோ ரொனால்டோ - 130 போட்டிகளில் 60 கோல்கள் மெஸ்ஸி சாதனைக்கு அருகில் எம்பாபே..! தமிழில் பதிவிட்ட ஃபிஃபா! 60 goals in fewer matches than Messi and Mbappe... Erling Haaland's record!