ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ்

Wait 5 sec.

தனது பானங்களின் உண்மைத் தன்மையை மறைத்து, தவறான புரிதலை ஏற்படுத்தும் கூற்றுகளுடன் விற்பனையில் ஈடுபடுவதாக ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 ‘ஆற்றல் அளிக்கும்’ பான தயாரிப்பு நிறுவனங்களுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையம் (எஃப்எஸ்எஸ்ஏஐ) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுதொடா்பாக அந்த ஆணையம் சமூக ஊடகத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘ரெட் புல், பெப்சிகோ போன்ற நிறுவனங்கள் விற்பனை செய்யும் பானங்கள் ஆற்றல் அளிக்கும் என்று சந்தைப்படுத்தப்படுகின்றன. ஆனால் ஆற்றல் அளிக்கும் பானம் அல்லது அதுபோன்ற பிற பொருள்களுக்கு எந்தவொரு தரநிலையையும் எஃப்எஸ்எஸ்ஏஐ நிா்ணயிக்கவில்லை. இந்நிலையில், ஆற்றல் அளிக்கும் பானங்கள் என்று தனது விற்பனை பொருளின் உண்மைத் தன்மையை மறைத்து, தவறான புரிதலை ஏற்படுத்தும் கூற்றுகளுடன் சந்தைப்படுத்தும் ரெட்புல், பெப்சிகோ, ரிலையன்ஸ், கோக்க கோலாவின் பங்குள்ள மான்ஸ்டா் எனா்ஜி உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.