ஈரான் உடனான மறைமுகப் பேச்சுவார்த்தை சிறந்த முறையில் நடைபெறுகிறது! - டிரம்ப் பேச்சு!

Wait 5 sec.

கத்தாரில் நடைபெற்று வரும் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மறைமுகப் பேச்சுவார்த்தை சிறந்த முறையில் நடைபெறுவதாக, அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகக் கடந்த ஜூன் 17 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன.இதனைத் தொடர்ந்து, கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று (ஜூலை 1) அமெரிக்கா மற்றும் ஈரானிய பிரிநிதிகள் நேரடியாக ஒருவரையொருவர் சந்திக்காமல் மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், கத்தார் அரசு பரிசளித்த ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தின் மூலம் அதிபர் டிரம்ப் இன்று தோஹாவுக்குப் பயணம் மேற்கொண்டார். அதற்கு முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் தோஹாவில் ஈரான் உடன் சிறந்த முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருதாகக் கூறியுள்ளார். இதுபற்றி, அவர் கூறியதாவது: “தற்போதைய நிலவரப்படி தோஹாவில் சிறந்த முறையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. ஈரானின் அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கை சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மருமகனான ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்பு பிரதிநிதி ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று கத்தார் சென்றனர்.முன்னதாக, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்ற சில நிபந்தனைகளாவது அமல்படுத்தப்படும் வரையில் அமெரிக்கா உடன் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்த மாட்டோம் என ஈரானிய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.மத்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரியின் பதவிக்காலம் நீட்டிப்பு!Trump has stated that the indirect talks between the US and Iran currently taking place in Qatar are proceeding very well.