முதல் டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா?

Wait 5 sec.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வைபவ் சூர்யவன்ஷி பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.இந்திய அணி அண்மையில் அயர்லாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக இழந்தது. இந்தத் தொடரில் இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி இடம்பெற்றபோதிலும், இரண்டு போட்டிகளிலும் அவர் களமிறக்கப்படவில்லை. இந்திய அணி தொடரை முழுமையாக இழந்ததால், வைபவ் சூர்யவன்ஷியை ஏன் பிளேயிங் லெவனில் களமிறக்கவில்லை என்ற கேள்விகள் எழுந்தன.முன்னாள் வீரர்கள் பலரும் வைபவ் சூர்யவன்ஷியை அயர்லாந்துக்கு எதிரான தொடரில் களமிறக்கியிருக்க வேண்டும் என விமர்சிக்கத் தொடங்கினர். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி, வைபவ் சூர்யவன்ஷியை முதல் போட்டியிலேயே பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டன.இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான பிளேயிங் லெவனில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய வைபவ் சூர்யவன்ஷி 230-க்கும் அதிகமான ஸ்டிரைக் ரேட்டில் 776 ரன்கள் குவித்தார். கிட்டத்தட்ட சிறந்த பேட்டருக்கான அனைத்து விருதுகளையும் அவரே வென்றார். சிறப்பான ஃபார்மில் இருக்கும் அவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டியிலிருந்து பிளேயிங் லெவனில் இடம்பெற வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி நாளை (ஜூலை 1) நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுக வீரராக வைபவ் சூர்யவன்ஷி களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை நடைபெறும் போட்டியில் அவர் விளையாடும் பட்சத்தில், இந்திய அணிக்காக மிகவும் இளம் வயதில் அறிமுகமாகும் வீரர் என்ற சாதனையை அவர் படைப்பார்.Expectations have arisen among fans regarding whether Vaibhav Suryavanshi will be included in the playing XI for the first T20 match against England.அயர்லாந்து தொடரில் வைபவ் சூர்யவன்ஷியை களமிறக்காதது ஏன்? பயிற்சியாளர் விளக்கம்!