உலகக் கோப்பை தோல்வி எதிரொலி: ஓய்வை அறிவித்தார் ஜெர்மனி கோல்கீப்பர்!

Wait 5 sec.

ஜெர்மனி கால்பந்து அணியின் கோல்கீப்பர் மானுவல் நோயர் (40 வயது) தனது சர்வதேச கால்பந்து விளையாட்டின் ஓய்வு முடிவை உறுதி செய்துள்ளார். ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் ஜெர்மனி அணி பராகுவே அணியிடம் பெனால்டி ஷூட் அவுட்டில் 4-3 என தோல்வியுற்றது. இந்தப் போட்டி சடன் டெத் முறையில் ஜெர்மனி தோல்வியுற்றது. கோல்கீப்பர் மானுவல் நோயர் ஜெர்மனி அணிக்காக 2009 முதல் விளையாடி வருகிறார். இதுவரை தேசிய அணிக்காக 128 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த 2014 உலகக் கோப்பையில் ஜெர்மனி 1-0 என ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி தனது நான்காவது கோப்பையை வென்றது. அந்தத் தொடரில் சிறப்பாக கோல்கீப்பிங் செய்ததற்காக தங்கக் கையுறை(கோல்டன் க்ளோவ்) விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்தத் தலைமுறையின் தலைசிறந்த கோல்கீப்பர் எனப் புகழ்ப்பெற்றார். ஆனால், இந்த உலகக் கோப்பையில் இவரது ஆட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததும் கவனிக்கத்தக்கது. போட்டிக்குப் பிறகு பேசிய மானுவல் நோயர், “இந்த மாதிரி முடிவது மிகவும் கசப்பாக இருக்கிறது” எனக் கூறினார்.உலகக் கோப்பையை 2014ல் வென்ற பிறகு ஜெர்மனி 2018, 2022, 2026ல் ரவுண்ட் ஆஃப் 16க்கு முன்னேறாமாலேயே வெளியேறியுள்ளதும் கவனிக்கத்தக்கது. ரத்தம், கண்ணீர், விடாமுயற்சி: மொராக்கோவின் நம்பிக்கை நாயகன் இஸ்மாயில் சைபாரி!Manuel Neuer confirms Germany retirement after world cup exits