உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள திபெத் ரயில் நிலையம், வெற்றிகரமாக 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.சூறாவளி, பனிப்பொழிவு, கனமழை என கடுமையான இயற்கை சூழல்களையும் தாண்டி இந்த ரயில் நிலையம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.சீன எல்லைக்குட்பட்ட திபெத்தில் சிங்காய் - திபெத் இடையிலான ரயில் சேவையை வழங்கிவரும் டங்குலா ரயில் நிலையம் உலகின் மிக உயரமான ரயில் நிலையமாக அறியப்படுகிறது.பூமியில் இருந்து 5,068 மீட்டர் (16,627 அடி) உயரத்தில் அமைந்துள்ள இந்த ரயில் நிலையம், சீனாவின் ஷாங்காய், பெய்ஜிங், செங்குடு போன்ற மற்ற நகரங்களை திபெத்தின் மையப் பகுதியுடன் இணைக்கிறது. உலகின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள ரயில் நிலையம் என்ற பெருமையைப் பெற்றுள்ள டங்குலா ரயில் நிலையம், 2006 ஜூலை 1 ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. நாளையுடன் 20 ஆண்டுகளை வெற்றிகரமாக நிறைவு செய்யவுள்ளது.கடுமையான பனிப்பொழிவு, சூறாவளி, கனமழை போன்ற இயற்கை சூழலிலும் முடங்காமல், வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. உயரமான இடங்களில் செயல்பட்டு வரும் ரயில் நிலையங்களில் திபெத் நாட்டில் உள்ள டங்குலா ரயில் நிலையத்திற்கு அடுத்தபடியாக பொலிவியா (4,786 மீட்டர்) மற்றும் பெரு (4,781 மீட்டர்) நாட்டின் ரயில் நிலையங்கள் உள்ளன. மரண தண்டனைக்கு அஞ்சமாட்டேன்; இந்த ஆண்டே வங்கதேசம் திரும்புவேன்: ஷேக் ஹசீனாThe worlds highest railway station Tanggula Railway Station completes 20 years!