தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை (டிஎன்இஏ 2026) உயர் கல்வித் துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் நாளை(ஜூலை 1) காலை வெளியிடுகிறார்.நிகழாண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) பிளஸ் 2 வகுப்பு மறு மதிப்பீட்டு முடிவுகள் (ஜூன் -21) தாமதமாக வெளியிட்டது.இதனால், தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் முன்னதாக வெளியிடப்படவிருந்த நிலையில், தாமதமாக நாளை வெளியிடப்படுகிறது.பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு (கவுன்சிலிங்) தேதிகளும் நாளை அறிவிக்கப்படும். வெளியிடப்படும் தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்வதற்கான குறைதீர்ப்பு கால அவகாசம் ஜூலை 1 முதல் ஜூலை 5- ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுமாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை அனுகி தீர்வு காணலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நிகழ் கல்வியாண்டுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 3-ஆம் தேதி தொடங்கி ஜூன் 5-ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெற்றது. இதில், மொத்தம் 3.02 லட்சம் மாணவர்கள் விண்ணப்பங்களைப் பதிவு செய்தனர்.விண்ணப்பத்தவர்களில் 2,43,575 பேர் தமிழகத்தைச் சோ்ந்தவர்கள்; பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளை சோ்ந்தவர்கள் 1,645 பேர். இதில், 103 பேர் இலங்கைத் தமிழர்களும் ஆவர்.Higher Education Minister P. Viswanathan will release the rank list for Tamil Nadu engineering student admissions (TNEA 2026) tomorrow (July 1) morning.குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!