ஆட்சி கவிழாது! தவெக அரசுக்கு துணை நிற்போம்! திருமாவளவன்

Wait 5 sec.

தமிழக வெற்றிக் கழகத்திற்காக துணை நிற்போம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுடன் திருமாவளவன் பேசியதாவது:''நாளை நடைபெறவுள்ள தவெக கூட்டணி கூட்டத்தில் விசிக பங்கேற்கும். தவெக அரசு கவிழ வாய்ப்பில்லை. புதிதாக பொறுப்பெற்று ஆட்சி செய்துவரும் தவெக அரசுக்கு விசிக துணை நிற்கும். 5 ஆண்டுகளுக்கு எந்த இடையூறும் இன்றி தவெக ஆட்சி தொடரும்.போதைப்பொருள் விவகாரத்தில் அமைச்சர் சரத்குமார் தன்னை நிரூபிக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுவதற்கு அதிமுகவில் நடக்கும் பிரச்னைகள்தான் காரணம். அதிமுகவிற்குள் நிலவும் உள்கட்சி முரண்கள் என்ன என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும்.அதிமுகவில் இருந்து 6 பேர் பதவி விலகியுள்ளது அக்கட்சியில் பிரச்னை உள்ளதைத்தான் காட்டுகிறது'' எனக் குறிப்பிட்டார். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் 2- வது நாள் மாநாடு தொடங்கியது! We will stand by TVK VCK thirumavalavan