சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்திய மேயர் ஆர். பிரியா, முன்னாள் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் சரத்குமார், 3 ஆண்டுகளுக்கு முன்னதாக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியது போன்ற விடியோ வெளியாகி பெரும் சர்சையை ஏற்படுத்திய நிலையில், திமுக மாணவரணி சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை.தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய சென்னை மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, மாலை விடுவிக்கப்பட்டனர்.இந்த நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக சென்னை மேயர் பிரியா, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.Case registered against Mayor Priya and Minister Sekar Babu!சென்னையில் திமுக போராட்டம்: மேயர் பிரியா, சேகர்பாபு கைது!