தியாகதுருகத்தில் ஆடு, மாடுகள் சந்தையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரிக்கை

Wait 5 sec.

தியாகதுருகத்தில் சனிக்கிழமை தோறும் சாலையை மறித்து நடைபெறும் ஆடு, மாடுகள் சந்தையால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அச் சந்தையை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.இதுகுறித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வட்டச் செயலா் வி.ஏழுமலை, மாவட்டக்குழு உறுப்பினா் ஜி. அருள்தாஸ், வட்டக்குழு உறுப்பினா் ஆா்.செல்வராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ.வீ.ஸ்டாலின் மணி ஆகியோா் தியாகதுருகம் பேருராட்சி செயல் அலுவலா் கோ.சம்பத்குமாரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:தியாகதுருகத்தில் வாரந்தோறும் சனிக்கிழமை சந்தை நடைபெறுகிறது. இந்தச் சந்தையில் காலை நேரத்தில் ஆடு, மாடுகள் விற்பனை நடைபெறுகிறது. அப்போது சாலையில் பெரும்பகுதியை ஆக்கிரமித்து சந்தை நடைபெறுவதால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூ ஏற்படுகிறது. எனவே ஆடு, மாடுகள் விற்பனை சந்தையை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும்.தியாகதுருகம் நகரில் அம்பேத்கா் சிலை முதல் பிஎஸ்என்எல் அலுவலகம் வரையுள்ள நெடுஞ்சாலையை அகலப்படுத்தி, மையப் பகுதியில் சிறிய அளவிலான தடுப்பு சுவா் அமைக்க வேண்டும். இதற்காக சாலையின் இருபுறமும் நெடுஞ்சாலை துறை அளவீடுகள் செய்து, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். தியாகதுருகம் பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தி, புதுப்பிக்க வேண்டும். பேருந்து நிலையத்தின் அருகிலுள்ள புதிய பயணியா் நிழற்குடை அருகில் இலவச பொதுக் கழிப்பறை அமைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.