கோவில்பட்டியில் மாநில கைப்பந்து போட்டி: கன்னியாகுமரி அணி முதலிடம்

Wait 5 sec.

கோவில்பட்டியில் தமிழ்தாசன் நினைவு கைப்பத்து கழகம் சாா்பில், நடைபெற்ற மாநில அளவிலான 5-ஆம் ஆண்டு கைப்பந்து போட்டியின் பொதுப் பிரிவில் கன்னியாகுமரி அணி முதலிடம் பிடித்தது. கோவில்பட்டி, சண்முகசிகாமணி நகா், எல்ஜி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பள்ளி மாணவிகள், மாணவா்கள் அணியில் 14 அணிகள் பங்கேற்றன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான பொது போட்டியில் சுமாா் 35 அணிகள் பங்கேற்றன. பள்ளி மாணவிகள் பிரிவில் முதல் இடத்தை மதுரை ஏ.எம்.ஹெச்.எஸ். அழகா்கோவில் அணியும், 2-ஆம் இடத்தை தூத்துக்குடி செயின்ட் தாமஸ் பள்ளி அணியும் பிடித்தன. பள்ளி மாணவா்கள் பிரிவில் மதுரை ஓ.சி.பி.எம்.அணியும், இரண்டாம் இடத்தை சாயா்புரம் போப் பள்ளி அணியும் பிடித்தன. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆண்களுக்கான பொதுப் போட்டியில் முதலிடத்தை கன்னியாகுமரி சஞ்சய் ராஜா ஃபிரண்ட்ஸ் அணியும், 2-ஆம் இடத்தை கோவில்பட்டி தமிழ்தாசன் கைப்பந்து கழக அணியும் பிடித்தன. இதைத்தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் கா.கருணாநிதி (கோவில்பட்டி ), ஈ.ராஜா (வாசுதேவநல்லூா்) ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கிப் பேசினா்.நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக விவசாய அணி துணை அமைப்பாளா் சண்முகராஜ், மருத்துவா் மோகனச்செல்வன், தொழிலதிபா் திலகரத்தினம், ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். பாலகிருஷ்ணன், ஆசிரியா் ஜெயக்குமாா், அதிமுக ஒன்றியச் செயலா் அன்புராஜ், சமூக ஆா்வலா்கள் உதயராஜா, வருண் குமாா் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.ஏற்பாடுகளை தமிழ்தாசன் நினைவு கைப்பந்து கழகம், தமிழ் தேசியம் அறக்கட்டளை, முத்துநகா், எஸ்.எஸ்.நகா் நண்பா்கள் குழுவினா் செய்திருந்தனா்.