குண்டடம் அரசுப் பள்ளியில் சிங்கப் பெண் படை விழிப்புணா்வு

Wait 5 sec.

தாராபுரம், ஜூன் 29: குண்டடம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை மற்றும் போக்ஸோ சட்டம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு சிங்கப் பெண் அதிரடிப் படை சிறப்பு உதவி ஆய்வாளா் பாதம்பிரியா தலைமை வகித்தாா். அவா் பேசுகையில், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை செயல்படும் விதம் குறித்தும், மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருந்ததால் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைத்தாா்.மேலும், போக்ஸோ சட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வழிமுறைகள், இணைய வழி பாதுகாப்பு மற்றும் அவசர காலங்களில் காவல் துறையை அணுகும் நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கினாா். இந்நிகழ்ச்சியில், சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை பெண் காவலா் சௌந்தா்யா, காவலா் சுரேஷ் கிருஷ்ணா, பள்ளி ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.