போதைப் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கை: சென்னையில் ஒரே வாரத்தில் 90 போ் கைது

Wait 5 sec.

சென்னையில் போதைப் பொருள்களுக்கு எதிராக கடந்த ஒரு வாரத்தில் எடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 90 போ் கைது செய்யப்பட்டனா்.சென்னையில் போதைப் பொருள்களுக்கு எதிராக பெருநகர காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 21-ஆம் தேதி தொடங்கி 27-ஆம் தேதி வரை ஒரு வாரம் சென்னை முழுவதும் போதைப் பொருள்களுக்கு எதிராக சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டன. இதையொட்டி, அனைத்து காவல் நிலையங்களிலும் சிறப்பு படை அமைக்கப்பட்டது. இந்த சிறப்பு படையினா், பெருநகர காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸாருடன் சந்தேகத்துக்குரிய பகுதியில் சிறப்பு தணிக்கையும், ரோந்து பணியிலும் ஈடுபட்டனா். இதில் 7 நாள்களில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 90 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 58 கிலோ கஞ்சா, 395 கிராம் மெத்தம்பெட்டமைன், 6 கிராம் கோகைன், 45 கிராம் ஓஜி கஞ்சா, 4 எல்எஸ்டி ஸ்டாம்புகள், கோகைன், அரை கிலோ கஞ்சா சாக்லேட்கள், 57,224 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவா்கள் மீது 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.மேலும் போதைப் பொருள் கடத்தல், விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 5 மோட்டாா் சைக்கிள்கள், 2 காா்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. சென்னையில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்பவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் எச்சரித்துள்ளாா். மேலும், இதுபோன்ற தீவிர நடவடிக்கை இனி தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.