பிஃபா உலகக் கோப்பைத் தொடரில் ஸ்வீடனை வீழ்த்தி ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு முன்னேறியது பிரான்ஸ் அணி.அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடைபெறும் பிஃபா உலகக் கோப்பைத் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் அணிகள் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றன.அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் நடந்த போட்டியில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் மற்றும் ஸ்வீடன் ஆகிய அணிகள் மோதின.ஆட்டத்தின் தொடக்கம் முதலே கோல் கணக்கை தொடங்க இரு அணி வீரர்களும் முனைப்பு காட்டினர். 45-வது நிமிடத்தில் பிரான்ஸின் நட்சத்திர வீரர் கிலியன் எம்பாப்பே, ஒஸ்மேன் டெம்பெலெவின் உதவியுடன் கோல் அடித்து அணிக்கு முன்னிலையைத் தேடித்தந்தார். இதனால், பிரான்ஸ் அணி முதல் பாதியில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.தொடர்ந்து இரண்டாவது பாதியில், மைக்கேல் ஒலிஸ் அசிஸ்ட் செய்ய பிராட்லி பார்கோலா கோல் அடிக்க பிரான்ஸ் அணி 2-0 கணக்கில் முன்னிலை பெற்றது.ஆட்டத்தின் 74-ஆவது நிமிடத்தில் மைக்கல் ஒலிஸ் அசிஸ்ட்-ஐ எம்பாப்பே கோலாக மாற்றினார். இதனால், பிரான்ஸ் 3-0 என வலுவான நிலையைப் பெற்று வெற்றி பெற்றது. ஆட்டம் முடியும் வரை ஸ்வீடன் அணியால் ஆறுதல் கோல்கூட போட முடியவில்லை.இதுவரை கனடா, பிரேசில், பராகுவே, மொராக்கோ, நார்வே ஆகிய நாடுகளுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு பிரான்ஸ் அணியும் முன்னேறியுள்ளது.France uncorked a Champagne performance on Tuesday (June 30, 2026) to sweep Sweden aside 3-0 with a display of attacking verve and precision and book their place in the World Cup last 16. The scoreline flattered Sweden.