வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 2026-ல் முதல் முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும்,14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.மேற்கு ஆசியாவில் பதற்றம் தணிந்ததைத் தொடர்ந்து, இந்திய பெட்ரோலியம் நிறுவனங்கள் நாடு முழுவதும் 19 கிலோ எடையுள்ள வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்களின் விலையைக் குறைத்துள்ளது; இது 2026-ல் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விலையில் செய்யப்படும் முதல் குறைப்பு நடவடிக்கையாகும். சா்வதேச எரிபொருள் விலை மற்றும் அந்நியச் செலாவணி விகிதத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில், சமையல் எரிவாயு சிலிண்டா் மற்றும் விமான எரிபொருள் விலையை மத்திய அரசுக்குச் சொந்தமான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன.இந்த நிறுவனங்கள் 19 கிலோ எடைகொண்ட வணிக சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை புதன்கிழமை மாற்றியமைத்தன.இதன்படி, சென்னையில் ஹோட்டல் மற்றும் உணவகங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டா் விலை ரூ.172.50 குறைக்கப்பட்டு ரூ.3,106-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமுமின்றி ரூ.957.50-க்கு விற்பனையாகிறது. தில்லியில் சிலிண்டரின் விலை ரூ. 183.50 குறைக்கப்பட்டு ரூ.2,930-க்கும், மும்பையில் ரூ.2,885.50-க்கும் விற்பனையாகிறது. வீட்டு உபயோக சிலிண்டா்களின் விலை மாற்றியமைக்கப்படவில்லை.பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.Commercial cylinder to cost Rs 183 cheaper in Delhi, no change domestic price In Delhiஇந்தியாவின் வெளிநாட்டுக் கடன்ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு