ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் உள்ள தில்லி-மும்பை விரைவுச்சாலையில், புதன்கிழமை அதிகாலை தனியார் பயணிகள் சொகுசு பேருந்து ஒன்று லாரியின் பின்புறத்தில் மோதி தீப்பிடித்ததில் 7 பேர் உடல்கருகி பலியாகினர்; 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம், ரிஷிகேஷில் இருந்து மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூருக்கு சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டம், கொல்வா காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தனவ்தா அருகே தில்லி-மும்பை விரைவுச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து புதன்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியதில் பேருந்து தீப்பிடித்து எரிந்தது. அடுத்த சில வினாடியில் பேருந்து முழுவதும் தீ வேகமாகப் பரவியது. ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் உள்ள தில்லி-மும்பை விரைவுச்சாலையில் தனியார் பயணிகள் சொகுசு பேருந்து ஒன்று லாரி மீது மோதி தீப்பிடித்து எரிந்ததில், ஏழு பேர் உயிரிழந்தனர், 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது பேருந்தின் கருகிய சிதைவுகளைக் ஆய்வு செய்யும் காவல்துறையினர்.அதிகாலை நேரத்தில் பயணிகள் ஆழந்த உறக்கத்தில் இருந்த நிலையில், மேல் படுக்கையில் இருந்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். இதனால் அவர்களால் உடனடியாக பேருந்தில் இருந்து வெளியேற முடியவில்லை.இந்த கோர விபத்தில் பேருந்தில் இருந்த 5 பேர் உடல் கருகி பேருந்திலேயே பலியாகினர். படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற இரண்டு பேர் வழியிலேயே பலியானதாக தௌசா மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பியூஷ் தீட்சித் தெரிவித்தார்.