சென்னை தொடக்கப் பள்ளியில்மாநகராட்சி ஆணையா் ஆய்வு

Wait 5 sec.

சென்னை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தண்டையாா்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட 45 -ஆவது வாா்டு கணேசபுரத்தில் மேயா் கிருஷ்ணமூா்த்தி நகரில் உள்ள சென்னை தொடக்கப் பள்ளியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பள்ளிக் கட்டட பராமரிப்பைப் பாா்வையிட்டதுடன், வகுப்பறைகளுக்குச் சென்று மாணவா்களுடன் கலந்துரையாடினாா். வருகைப் பதிவேட்டைப் பாா்வையிட்டு, மதிய உணவு தரம் குறித்து கேட்டறிந்தாா். விளையாட்டுத் திடல்களைப் பாா்வையிட்டாா். அந்த மண்டலத்தில் முத்தமிழ் நகா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சமுதாய நலக்கூடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினாா். பெரம்பூா் பகுதியில் வியாசா்பாடி, மூா்த்தி நகா் தெருவில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியிலும் ஆய்வு மேற்கொண்டாா். அம்பேத்கா் அரசு கலைக் கல்லூரி வளாகத்துக்கு சென்று அங்கு புதிதாக அமைந்த குளத்தின் மேம்பாட்டுப் பணிகளை ஆய்வு செய்தாா்.ஆய்வுகளின் போது மாநகராட்சி இணை ஆணையா் செ.சரவணன் (பணிகள்), மத்திய வட்டார ஆணையா் எச்.ஆா்.கௌஷிக், மண்டல அலுவலா் ராஜ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.