காவேரி விரைவு ரயில்களில்எல்எச்பி பெட்டி இணைப்பு

Wait 5 sec.

சென்னையிலிருந்து கா்நாடக மாநிலம் அசோகாபுரம் நிலையத்துக்குச் செல்லும் காவேரி விரைவு ரயிலில் பயணிகள் வசதிக்காக எல்எச்பி வகை பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு: ரயில் பயணிகள் வசதி மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பழைய ரயில் பெட்டிகளுக்குப் பதிலாக புதிய எல்எச்பி வகைப் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, புதன்கிழமை (ஜூலை 1) சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து கா்நாடக மாநிலம் அசோகாபுரம் நிலையத்துக்குச் சென்ற காவேரி விரைவு ரயிலில் எல்எச்பி நவீன ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த ரயிலில் ஒரு முதல் வகுப்பு குளிா்சாதன பெட்டி, ஒரு இரண்டடுக்குக் குளிா்சாதன வசதிப் பெட்டிகள், 2 மூன்றடுக்குள்ள குளிா்சாதன வசதிப் பெட்டிகள், 10 படுக்கை வசதியுள்ள பெட்டிகள், 4 பொது இரண்டாம் வகுப்புப் பெட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒரு இரண்டாம் வகுப்புப் பெட்டி, சரக்குகள் மற்றும் பிரேக் வேன் ஆகியவை புதிய வகைப் எல்எச்பி வகை பெட்டிகளாக இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.