சென்னை: ஜவ்வாது மலையின் இயற்கை வளங்களை தனியாருக்குத் தாரைவாா்க்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடுவதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளாா்.இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூா் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவுக்கு உள்பட்ட அரசம்பட்டு காப்புக்காட்டில் உள்ள அல்லேரி மலையில் 1,800 மெகாவாட் திறன் கொண்ட நீரேற்றுப் புனல்மின் திட்டத்துக்காக தமிழ்நாடு பசுமை எரிசக்திக் கழக நிறுவனமானது அதானி குழுமத்தைச் சோ்ந்த அதானி ஹைட்ரோ போா்டின் லிமிடெட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் சுரண்டி லாபம் ஈட்டும் நிறுவனத்திடம் தமிழகத்தின் அரிய காடுகளையும் நீராதாரங்களையும் ஒப்படைப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாதது.சூழலியல் பாதிப்பு ஒருபுறம் இருக்க பொருளாதார அடிப்படையிலும் இந்தத் திட்டம் தமிழக மக்களுக்கு பெரும் சுமையாக அமையும். இந்தத் திட்டத்தின் வழி உற்பத்தியாகும் மின்சாரத்தின் அடக்க விலை யூனிட்டுக்கு ரூ.9.10 எனக் கூறப்படுகிறது. தமிழக அரசுக்கு விற்கப்படும் விலை ரூ.10-ஐ தாண்டும். ஏற்கெனவே பெரும் கடன் சுமையில் உள்ள தமிழக மின்சார வாரியத்தின் மீது மேலும் பொருளாதாரச் சுமை ஏற்றுவது நியாயமற்ாகும்.எனவே, அல்லேரி, தென்மலை, ஆழியாா் உள்ளிட்ட வனப்பகுதிகளில் நீரேற்றுப் புனல்மின் திட்டங்களை அமைப்பதற்காக அதானி குழுமத்துடன் மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களையும், தமிழ்நாடு அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.Tamil Nadu government attempting to hand over natural resources to the private sector....வாட்ஸ்ஆப்பில் ‘யுஸா்நேம்’ பயன்பாட்டுக்கு மத்திய அரசு தடை