திமுகவின் முதுகில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குத்திவிட்டதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.அமமுக செய்தியாளர்கள் சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேசியதாவது, "மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, எனக்கு பிடித்த அரசியல் தலைவர். ஆனால், 9 ஆண்டுகளாக நிர்பந்தத்தில் இருந்ததாகவும், அவர்களை நிர்பந்தப்படுத்தி சின்னத்தில் (உதயசூரியன்) நிற்கச் சொன்னதாக அவர் கூறி, அவருடைய தரத்தை அவரே குறைத்துக் கொள்கிறார்.நிர்பந்தப்படுத்தியிருந்தால், அன்றைக்கே வெளியேறியிருக்கலாம், தனித்துப் போட்டியிட்டு இருக்கலாம். தேர்தலில் போட்டியிடாமலும் அவர் இருந்திருக்கிறார். அவர் இப்போது சொல்வது முதுகில் குத்துவதுதான்.திமுகவின் ஆதரவில் இருந்தபோது, விஜய் குறித்து அவர் என்னவெல்லாம் பேசினார். தேர்தல் முடிந்தபிறகும், தவெகவினர் என்னை அணுக மாட்டார்கள் என்று சொன்னவர்தான் வைகோ.மதிமுக எம்எல்ஏ-க்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால், அவர்களும் திமுக உறுப்பினர்களே. திமுக கொறடா சொல்வதைத்தான் அவர்கள் சட்டப்பேரவையில் நிறைவேற்ற முடியும்.அவர்கள் இருவரையும் ராஜிநாமா செய்யுமாறு விஜய் சொன்னதாகவும், அவர்களுக்கு தானே பிரசாரம் செய்வதாகக் கூறுவதும் உறுதியாக குதிரை பேரம்தான். இதனை யாரும் மறுக்க முடியாது" என்று தெரிவித்தார்.அரசு வழக்குரைஞர் நியமனத்துக்கு ரூ. 30 லட்சம் லஞ்சம்! அமைச்சர் என்.ஆனந்த் மீது வழக்குTTV Dhinakaran criticized MDMK Leader Vaiko for stabbing the DMK in the back