நடிகர் அரவிந்த் ஆகாஷ் திருமணம்! காதலியை கரம்பிடித்தார்!

Wait 5 sec.

‘சென்னை 28’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர் அரவிந்த் ஆகாஷ் திருமணம் நேற்று நடைபெற்றது.ஹே ராம் படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகர் அரவிந்த் ஆகாஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் இவர் பெரிதும் கவனிக்கப்பட்டது சென்னை 28 படத்தின் மூலமே. அதன் பின்னர், வெங்கட் பிரபு எடுத்த கோவா, மங்காத்தா, பிரியாணி, சென்னை 28-2, தி கோட் என அனைத்துப் படங்களிலும் இவர் நடித்திருந்தார். அதுதவிர சின்னத்திரை சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார்.தற்போது 50 வயதான நடிகர் அரவிந்த் ஆகாஷ் தனது நீண்ட நாள் காதலியான சாத்வியை நேற்று திருமணம் செய்தார். மலேசியாவில் நடைபெற்ற இவரது திருமணத்தில் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் வைபவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இவர்கள் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.வெங்கட் பிரபு மற்றூம் குடும்பத்தினருடன் அரவிந்த் ஆகாஷ் - சாத்வி Actor Arvind Akash gets married! He ties the knot with his girlfriend!மகன் சஞ்சய்யுடன் மோதுகிறாரா முதல்வர் விஜய்?