கத்தார் நாட்டில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வரும் நடவடிக்கையாகக் கடந்த ஜூன் 17 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்து இருதரப்புக்கும் இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், கத்தார் தலைநகர் தோஹாவில், அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையே இன்று (ஜூலை 1) மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பேச்சுவார்த்தைகளில் இருதரப்பின் பிரிநிதிகளும் நேரடியாக ஒருவரையொருவர் சந்திக்க மாட்டார்கள் எனவும், கத்தார் அரசின் மத்தியஸ்தர்களின் முன்னிலையில் பேச்சு நடைபெறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் மருமகனான ஜாரெட் குஷ்னர் மற்றும் சிறப்பு பிரதிநிதி ஸ்டீவ் விட்கோஃப் ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று தோஹா வந்தடைந்ததாகக் கூறப்பட்டது. ஏற்கெனவே, அதிபர் டிரம்ப்பின் எச்சரிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகக் கடந்த சில நாள்களுக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெறவிருந்த அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க மறுப்பு தெரிவித்து ஈரானிய பிரதிநிதிகள் வெளியேறினர். இத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில நிபந்தனைகளாவது அமல்படுத்தப்படும் வரையில் அமெரிக்கா உடன் நேரடி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படாது என ஈரானிய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் 12 வது நாள் போராட்டம்! சோனம் வாங்சுகின் உடல்நிலை பின்னடைவு!It has been reported that indirect talks between the United States and Iran are taking place in Qatar.