அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 16 மாவட்டங்களில் மழை!

Wait 5 sec.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சராசரி கடல் மட்டத்தில் தெற்கு குஜராத்திலிருந்து கர்நாடகம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.சுமார் 1.5 கிமீ உயரத்திலிருந்து 7.6 கிமீ உயரம் வரை வடக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஜூலை 3 ஆம் தேதி உருவாகக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதன் காரணமாக, இன்று(ஜூலை 1) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், வேலூர், திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி தென்காசி, திருநெல்வேலி திருப்பூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.The Chennai Regional Meteorological Centre has stated that there is a possibility of rain in 17 districts, including Chennai, over the next two hours.சென்னையில் இன்று மழை பெய்யுமா?