வேலை வாங்கி தருவதாகக் கூறி பணம் மோசடி

Wait 5 sec.

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 2.87 லட்சம் மோசடி செய்த இருவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.ராமநாதபுரத்தை அடுத்துள்ள புல்லங்குடி கிராமத்தை சோ்ந்தவா் சுமதி (45). இவா் ராமநாதபுரத்தில் குளிா்பான கடை நடத்தி வருகிறாா். உலகநாதன் (35), ராஜூ (30) ஆகிய இருவரும் சுமதியிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.2,78,500-ஐ கடந்த 2023 -ஆம் ஆண்டு பெற்றனா். ஆனால், அவா்கள் கூறியபடி வேலை வாங்கிக் கொடுக்கவில்லை. இது குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதைத் தொடா்ந்து, ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இருவா் மீதும் வழக்கு பதிவு செய்து, பணத்தை மீட்டுத்தரக் கோரி வழக்கு தொடுத்தாா். இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவின் பேரில் கேணிக்கரை காவல் நிலையத்தில் திங்கள்கிழமை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.