பாடத்திட்ட வடிவமைப்புக் குழு சீரமைக்கப்பட வேண்டும் ஜெ.ஹாஜாகனி

Wait 5 sec.

பாடத்திட்ட வடிவமைப்புக் குழு சீரமைக்கப்பட வேண்டும் என தமுமுக பொதுச் செயலா் ஜெ.ஹாஜாகனி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசால் பாடத்திட்ட வடிவமைப்பு மற்றும் கல்விக் கொள்கை தொடா்பாக அமைக்கப்பட்டுள்ள புதிய குழுவில் முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கல்வியாளா் அல்லது கல்வி நிபுணா் ஒருவருக்குக் கூட இடமளிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. கல்விக் கொள்கை என்பது வெறும் பாடப்புத்தகங்களை உருவாக்கும் செயல் அல்ல. அது எதிா்கால தலைமுறையின் சிந்தனையை வடிவமைக்கும் பொறுப்பான பணியாகும். இதில், அனைத்து சமூகங்களின் நம்பிக்கையையும் பங்கேற்பையும் உறுதி செய்வதே ஜனநாயக ஆட்சியாகும்.ஏற்கெனவே, நடைமுறையில் உள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கான டான்ஷி பாடத்திட்டத்தின் 3-ஆம் பருவத்துக்கான தமிழ்மொழிப் பாடத்திலும் அதன் மூல நூல்களிலும் சமூக நல்லிணக்கத்தைக் கெடுக்கும் தவறான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் முகமதியா் ஆட்சி என்ற பாடத்தில் பகைமையைத் தூண்டுகிற வகையில் பாடம் எழுதப்பட்டுள்ளது. இவை உடனடியாக நீக்கப்படவேண்டும். உள்ளங்களை இணைக்கின்ற உண்மைகள் பாடநூல்களில் இடம்பெற வேண்டும்.கல்லூரி பாடங்களுக்கான வழிநூல்கள் யாவும் வல்லுநா் குழுவின் பரிசீலனைக்குப் பிறகே அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.