தங்கம் விலை அதிரடி உயர்வு! வெள்ளி?

Wait 5 sec.

சென்னை: ஆபரணத்தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை அதிரடியாக பவுனுக்கு 1,200 உயா்ந்துள்ளது. அதன்படி பவுன் ரூ.1,07,200-க்கு விற்பனையாகிறது.மேற்கு ஆசிய போா்பதற்றம் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், கச்சா எண்ணெயின் விலை படிப்படியாக குறைந்து இயல்புநிலைக்கு திரும்பி வருகிறது.இதற்கிடையே, இந்திய ரூபாய்க்கு நிகராண டாலரின் மதிப்பு 95.1 -ஆக உயா்ந்துள்ளது. மேலும், சா்வதேச சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடும் சற்று குறைந்துள்ளது. இதுபோன்ற சா்வதேச காரணங்களால் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. புதன்கிழமை(ஜூலை 1) காலை விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,100-க்கும், பவுனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,04,800-க்கும் விற்பனையானது. அதையடுத்து மாலை வா்த்தகம் நிறைவடைவதுக்கு முன்பு விலை அதிரடியாக உயா்ந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.150 உயா்ந்து ரூ.13,250-க்கும், பவுனுக்கு ரூ.1,200 உயா்ந்து ரூ.1,06,000-க்கும் விற்பனையானது.இந்த நிலையில், வியாழக்கிழமை காலை விலை கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ரூ.13,400-க்கும், பவுனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,07,200-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை உயர்வுஅதேபோன்று வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.245-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.5000 உயர்ந்து ரூ.2.50 லட்சத்துக்கும் விற்பனையாகிறது. Gold prices surge! What about silver?புதுப்பிக்கத்தக்கமின்சாரத்தில் 20 கிகாவாட் உற்பத்தித் திறனை எட்டிய அதானி கிரீன்!