ஹார்ட் பீட் இணையத் தொடர் மூன்றாம் பாகத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. இரண்டாம் பாகமும் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றது. ஹார்ட் பீட் இணையத் தொடரின் இரண்டாம் பாகத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தீபா பாலு கோமா நிலைக்கு செல்கிறார். அவருக்கு கார்த்திக் குமார்தான் தனது தந்தை என்ற விவரம் தெரியவருகிறது. இதோடு தொடர் முடிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்றாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வரும் ஹார்ட் பீட் இணையத் தொடரின் 3வது சீசனில் நடிகை அனுமோள், கார்த்திக் குமார், தீபா பாலு, யோகலக்ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரிஷ், சர்வா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.இந்த நிலையில், ஹார்ட் பீட் மூன்றாம் பாகம் வருகின்ற ஜூலை 30 முதல் ஒளிபரப்பாகும் என்று ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. View this post on Instagram Heart Beat 3 Release Date Announcement!ஹார்ட் பீட் நாயகிக்கு குவியும் வாழ்த்து!