பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு பிளஸ் 1 வகுப்பில் தேர்வு செய்கின்ற பாடப்பிரிவு என்பது வெறும் பள்ளியோடு முடிந்துவிடாது, மாணவர்களின் எதிர்கால கல்விக்கான முக்கியத் தெரிவாகவும் இருக்கிறது. பிளஸ் 2 வகுப்பை நிறைவு செய்துவிட்டால் கல்லூரியில் மாணவ சேர்க்கைக்கான தேடல் தொடங்கிவிடும்.இங்குதான் சில சிக்கல்களும் தொடங்குகின்றன. பொதுவாக சில நுழைவுத் தேர்வுகளும் அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு என சில நுழைவுத் தேர்வுகளையும் மாணவர்கள் எழுத வேண்டியிருக்கிறது.நீட், ஜேஇஇ இல்லாமல், நாடு முழுவதும் நடத்தப்படும் சில பொதுவான மற்றும் பல்கலை நுழைவுத் தேர்வுகளில், பிட்சாட் - பிட்சாட் நுழைவுத் தேர்வு பிட்ஸ் பிலானியில் ஒருங்கிணைந்த பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான தகுதித் தேர்வாக விளங்குகின்றது. பொறியியலில் தரமான கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான வாய்ப்புகளை பிர்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனம் ஆகிய பிட்ஸ் பிலானி வழங்கி வருகின்றது.விஐடிஇஇ - இது விஐடியில் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஆகும். உலகளாவிய பொறியியல் கல்விக்கான வேலூர், சென்னை, போபால் மற்றும் அமராவதியில் உள்ள விஐடி வளாகங்களில் சேருவதற்கான தகுதித் தேர்வாக இத்தேர்வு விளங்குகின்றது.ஜிப்மர் - மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜவஹர்லால் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இது. ஜிப்மரில் மருத்துவக் கல்வியைத் தொடரவும் ஆராய்ச்சியில் ஈடுபடவும் மாணவர்களுக்கு வாய்ப்பினை இந்த நுழைவுத் தேர்வு தருகிறது.எய்ம்ஸ் - மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இது. எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு புகழ்பெற்ற மருத்துவக் கல்வி மற்றும் சுகாதார வசதிகளைப் பெற்று படிக்கின்ற வாய்ப்பினை மாணவர்கள் இதன் மூலம் பெற முடியும்.மணிப்பால் - மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு இந்த நுழைவுத் தேர்வு மணிப்பால் உயர் கல்வி அகாடமியில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான வாய்ப்பினைத் தருகிறது. மணிப்பாலின் விரிவான சுகாதாரக் கல்வித் திட்டங்களில் சேருவதற்கான தகுதித் தேர்வாக இந்நுழைவுத் தேர்வு விளங்குகிறது.நாட்டா - கட்டடக்கலையில் தேசிய திறனறி நுழைவுத் தேர்வு இந்தியாவில் இளங்கலை கட்டடக்கலை திட்டங்களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு. இந்தியாவில் உள்ள பல்வேறு கட்டிடக்கலை கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் படிக்கின்ற வாய்ப்பினை மாணவர்கள் பெற முடியும்.ஐலெட் நுழைவுத் தேர்வு - தில்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை சட்டப் படிப்புகளைப் படிப்பதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கான நுழைவாயில் இந்த நுழைவுத் தேர்வு ஆகும்.நிஃப்ட் - இந்த நுழைவுத் தேர்வு தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் இளங்கலை ஃபேஷன் வடிவமைப்பு படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஆகும். இதன் மூலம் ஃபேஷன் டிசைன் மற்றும் ஃபேஷன் துறையில் சிறப்பு கல்வி வாய்ப்பினை மாணவர்கள் பெற முடியும்.எல்எஸ்ஏடி - சட்டக் கல்லூரி சேர்க்கைக்கான தரப்படுத்தப்பட்ட நுழைவுத் தேர்வு, விமர்சன சிந்தனை மற்றும் தர்க்கரீதியான பகுத்தறிவைச் சோதித்தலுக்கான தேர்வு இது. உலகளவில் சட்டப் பள்ளிகளால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, உலகளவில் பல்வேறு சட்டப் பள்ளிகளில் சட்டம்படிப்பதற்கான வாய்ப்புகளை இதன் மூலம் பெற முடியும்.யூசீட் - யூசீட் எனப்படும் வடிவமைப்புக்கான இளங்கலைப் பொது நுழைவுத் தேர்வு. 4 ஐஐடிகள் மற்றும் யூசீட் ஐ ஏற்றுக்கொள்ளும் பிற நிறுவனங்களில் மதிப்புமிக்க நிறுவனங்களில் வடிவமைப்புத் துறையில் தரமான கல்வியைப் பெறுவதற்கான இளங்கலை வடிவமைப்பு (பி.டெஸ்) படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஆகும்.ஜேஇஇ பி.ஆர்க் - கட்டடக்கலை இளங்கலைக்கான கூட்டு நுழைவுத் தேர்வு. ஜேஇஇ முதன்மைத் தேர்வின் ஒரு பகுதியாக, இந்தத் தேர்வு இளங்கலை கட்டடக்கலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கானது. ஜேஇஇ முதன்மைத் தேர்வில் பி ஆர்க் மதிப்பெண்களை ஏற்றுக்கொள்ளும் திட்டமிடல் மற்றும் கட்டடக்கலை பள்ளி, தில்லி, விஜயவாடா, முதலியன, மாளவியா தேசிய தொழில்நுட்ப நிறுவனம், ஜெய்ப்பூர், மற்றும் பல நிறுவனங்களில் இளங்கலை கட்டிடக்கலை திட்டங்களில் மாணவர்கள் சேருவதற்கான தகுதித் தேர்வாக விளங்குகின்றது.நிட் நுழைவுத் தேர்வு - இந்தியாவின் முன்னணி வடிவமைப்பு நிறுவனங்களில் வடிவமைப்பு திறனறி கல்வி வாய்ப்பினை மாணவர்கள் பெற தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் வடிவமைப்பு படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு.Just one or two? How many entrance exams are there? Here is the list!