பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது நயாரா நிறுவனம்!

Wait 5 sec.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் பதற்றம் தணிந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை நயாரா நிறுவனம் குறைத்துள்ளது. மேற்காசியாவில் ஈரான் - இஸ்ரேல், அமெரிக்க கூட்டுப் படைகள் இடையே நடைபெற்ற போரால் கச்சா எண்ணெய் வரத்து பாதிக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவியது. கச்சா எண்ணெய் பற்றாக்குறை மற்றும் விலை ஏற்றம் காரணமாக இந்தியாவில் முன்னணி எரிவாயு நிறுவனங்களில் ஒன்றான நயாரா நிறுவனம், பெட்ரோல், டீசல் விலையை கடந்த மார்ச் மாதம் உயர்த்தியது . அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தியது. தற்போது மேற்காசியப் போர் பதற்றம் தணிந்துள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதுடன் பெட்ரோல், டீசல், எரிவாயு விநியோகம் சீராகியுள்ளது. இதனால் நயாரா நிறுவனம் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 5 -ம் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 -ம் குறைக்கப்பட்டுள்ளது. நயாரா நிறுவனத்தின் 7,000 பெட்ரோல் நிலையங்களில் இன்று முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளது .Nayara Energy cuts petrol by Rs 5 per litre, diesel by Rs 3 as global oil rates downதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தேரோட்டம்! தேர் குடை சரிந்ததால் பரபரப்பு!