இயக்குநர் சசி இயக்கத்தில் உருவான நூறு சாமி திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர்கள் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா நடிப்பில் உருவான நூறு சாமி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் எடுத்துக்கொண்ட கதைக்காக நல்ல வரவேற்பைப் பெற்றது. கணவனை இழந்த பெண்ணாகவும் இரண்டு மகன்களின் அம்மாவாகவும் சிறப்பான நடிப்பை ஸ்வாசிகா வழங்கியிருந்ததாகப் பலரும் பாராட்டி வருகின்றனர். உண்மைக் கதையைத் தழுவி எடுக்கப்பட்டது என்பதால், சில ஆரோக்கியமான விவாதங்களையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், நூறு சாமி திரைப்படம் இதுவரை ரூ. 10 கோடிக்கு அதிகமாக வசூலித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமென்பதால் லாபகரமான இடத்தை நோக்கியே இது நகர்ந்திருக்கிறது. குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்பட்டேன்: ஐஸ்வர்யா லட்சுமிInformation regarding the box office collection of the film Nooru Saami, directed by Sasi, has been released.