அணுக்கனிம சுரங்கம்! மக்களுக்கு தவெக துரோகம்! கனிமொழி கண்டனம்

Wait 5 sec.

கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான நில ஒதுக்கீட்டு ஆணையை நீட்டித்ததற்கு தமிழ்நாடு அரசுக்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான நில ஒதுக்கீட்டு ஆணை நேற்றுடன் காலாவதியாக இருந்தது. இந்த நிலையில், அந்த ஆணையை ஓராண்டுக்கு நீடித்து தமிழ்நாடு அரசு நேற்று அரசாணை வெளியிட்டிருந்தது.இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.அவர் தெரிவித்திருப்பதாவது:”கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான நில ஒதுக்கீட்டு ஆணையை, அது காலாவதியாகும் கடைசி நாளன்று, ஓராண்டுக்கு நீட்டித்து தவெக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது ஏற்புடையதல்ல.அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்க திட்டத்தைக் கைவிட வேண்டும் என தங்கள் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இப்போது சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தான மத்திய அரசின் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கும் வகையில் செயல்படும் இந்த தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு, தென் மாவட்ட மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.Atomic mineral mining: TVK betrays the people! Kanimozhi condemns the move.முதல்வர் விஜய் தலைமையில் தவெகவில் இணைகிறார் சி. விஜயபாஸ்கர்!