சென்னையில் இன்று நடைபெறும் அதிமுக மகளிரணி கூட்டத்தில் அதிமுக முன்னால அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் பங்கேற்கவில்லை. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மகளிரணி கூட்டம் இன்று (புதன்கிழமை) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.கட்சியில் மகளிர் அணியின் செயல்பாடுகள் குறித்தும் கட்சியின் வளர்ச்சிப் பணிகளில் மகளிரின் பங்கு குறித்தும் இதில் ஆலோசிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. அதிருப்தியில் முன்னாள் அமைச்சர்கள்அதிமுகவில் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகளுக்கு கடந்த வாரம் மீண்டும் பதவி வழங்கப்பட்டது. அதிமுக துணைப் பொதுச் செயலர்களாக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.ஆனால், எஸ்.பி. வேலுமணி ஆதரவாளர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்படாததால் அவர் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் எஸ்.பி. வேலுமணி பேசும்போது, “என்னை நம்பி வந்தவர்களை விட்டுவிட்டு நான் மட்டும் பதவியை ஏற்க தயாராக இல்லை. என்னுடன் வந்த 30 மாவட்டச் செயலாளர்களுக்கு பதவி கொடுக்கவில்லை. நான் மட்டும் எப்படி துணைப் பொதுச் செயலர் பதவியை ஏற்க முடியும்?" என்று அவர் பேசியுள்ளார். அதிருப்தி காரணமாகவே இன்றைய மகளிரணி கூட்டத்திலும் எஸ்.பி. வேலுமணி பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட நத்தம் விஸ்வநாதனும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கவில்லை. AIADMK Women's Wing Meeting: S.P. Velumani and Natham Viswanathan Did Not Participateதிருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் தேரோட்டம்! தேர் குடை சரிந்ததால் பரபரப்பு!