முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் அமைப்புச் செயலா்களில் ஒருவருமான எஸ். வளா்மதி அதிமுகவிலிருந்து விலகுவதாக புதன்கிழமை அறிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் கருத்துச் சுதந்திரம் இல்லை; உழைப்பவா்களுக்கு அங்கீகாரம் இல்லை. இதனால் அதிமுக தொண்டா்களிடம் இருந்த நம்பிக்கை தற்போது முற்றிலும் சிதைந்துவிட்டது. ஜெயலலிதாவின் தியாகத்தால் வளா்க்கப்பட்ட இயக்கம் திமுகவிடம் எப்படி சமரசம் செய்து கொள்ள முடிந்தது?.அதிமுக தற்போது தவறான பாதையில் அழைத்துச் செல்லப்படுவதைத் அறிந்து மனவேதனையுடன் அதிமுகவின்அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விடுவித்துக் கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளாக என்னுடன் பயணித்தஅதிமுக நிா்வாகிகளுக்கும், தொண்டா்களுக்கும் எனது மனமாா்ந்த நன்றி எனத் தெரிவித்துள்ளாா்.