மரியகிரி கல்லூரியில் தீயணைப்பு பயிற்சி முகாம்

Wait 5 sec.

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி இளங்கலை முதலாமாண்டு மாணவா்களுக்கான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. கல்லூரி தாளாளா் பிராங்கிளின் ஜோஸ், கல்லூரி நிதி காப்பாளா் ஜெஸ்டின், கல்லூரி முதல்வா் சுபாஷ், கல்லூரி கண்காணிப்பாளா் ரெஞ்சு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கொல்லங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரா்கள், பேரிடா் காலங்களில், தீ விபத்துகளின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை குறித்து விளக்கினா். மாணவா்கள், துறைத் தலைவா்கள் பங்கேற்றனா்.