தென்காசி மாவட்டம், சிவகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை தினம் கொண்டாடப்பட்டது. பசலி 1436 வரவேற்கும் விதமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் கோட்டாட்சியா் அனிதா, சிவகிரி வட்டாட்சியா் வெங்கடசேகா், சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் மைதீன்பட்டாணி , குடிமைப்பொருள் வட்டாட்சியா் ராமலிங்கம், வருவாய்த்துறையினா் கலந்து கொண்டனா்.