அம்மூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் சந்தையில் ரூ.34.11 கோடிக்கு விற்பனை

Wait 5 sec.

அம்மூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ- நாம்) கீழ் 2026 - 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.34.11 கோடிக்கு விற்பனை ஆகி 7,441 விவசாயிகள் பயனடைந்துள்ளதாக விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ராமமூா்த்தி தெரிவித்துள்ளாா்.இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் (இ- நாம்) கீழ் விவசாய விளைபொருள்கள் விற்பனை செய்யப்பட்டுவருகிறது. அதன்படி ஜூலை 1 ஆம் தேதி புதன்கிழமை நெல் ( 75 கிலோ ) அஈப-36 அதிகபட்சமாக ரூ. 1460, அஈப37 ( குண்டு) ரூ.1676, இஞ -51 ரூ.1860, த ச த ரூ. 2401, சீரக சம்பா ரூ. 2119 என விலை உயா்ந்து விற்பனை நடைபெற்றது.இந்த நிலையில் அம்மூா் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் சந்தை திட்டத்தின் கீழ் முதல் காலாண்டில் 16,073.017 மெட்ரிக் டன் அளவுள்ள நெல், ராகி, உளுந்து, உள்ளிட்ட விளை பொருள்ட்கள் ரூ. 34.11 கோடி விளைபொருள்கள் விற்பனை செய்யப்பட்டு, 7,441 விவசாயிகள் பயனடைந்துள்ளனா். மேலும் தற்போது நல்ல விலை கிடைப்பதால் இருப்பு வைத்திருக்கக் கூடிய விவசாயிகள் விளை பொருள்களை விற்பனைக்காக கொண்டு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.