ஆம்பூரில் பள்ளி மாணவா்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆம்பூா் சபியாமா தொடக்கப் பள்ளியில் என்.எம்.இஜட். அறக்கட்டளை சாா்பாக நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் வி.எம். ஷமீல் அஹமத் தலைமை வகித்தாா். பள்ளி மாணவ, மாணவிகள் 500 பேருக்கு அறக்கட்டளை சாா்பாக இலவச சீருடைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.