மு.க. ஸ்டாலினை சந்தித்த அமெரிக்க துணைத் தூதர்!

Wait 5 sec.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அமெரிக்க துணை தூதர் மரியானா எல். நெய்ஹூலர் இன்று (ஜூலை 2) சந்தித்தார். மரியாதை நிமித்தமாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது திராவிட மாடல் புத்தகத்தை அவருக்கு மு.க. ஸ்டாலின் பரிசாக வழங்கினார்.இது தொடர்பாக திமுக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின், அமெரிக்கத் துணைத் தூதர் மரியானா எல். நெய்ஷூலர் இன்று (02-07-2026) மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். அப்போது கழகத் தலைவர் அவர்கள், “The Dravidian Model” புத்தகத்தை வழங்கினார் எனப் பதிவிடப்பட்டுள்ளது.திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் திரு. @mkstalin, அமெரிக்கத் துணைத் தூதர் திருமிகு மரியானா எல். நெய்ஷூலர் அவர்கள் இன்று (02-07-2026) மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார். அதுபோது கழகத் தலைவர் அவர்கள், “The Dravidian Model” புத்தகத்தை வழங்கினார். pic.twitter.com/94fIy3OLHT— DMK (@arivalayam) July 2, 2026சென்னையில் உள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்தின் தலைவராக மரியானா எல். நெய்ஷுலர், மார்ச் 2 ஆம் தேதி பொறுப்பேற்றார். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமெரிக்காவின் நலன்கள் மற்றும் தூதரக உறவுகளை இவர் நிர்வகிக்கிறார்.இதனிடையே மரியாதை நிதித்தமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவர் சந்தித்தார். மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மறுசீரமைப்புக் குழு ஆலோசனை!US Deputy Consul General meets M.K. Stalin