திமுகவும் அதிமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றதாக அமைச்ச ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்.தவெகவில் மாற்றுக் கட்சியின் இணைப்பு விழாவில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது, "தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தவெக ஆதரவு கேட்கவில்லை. இது ஒர் அரசியல் வியூகம்.தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இரவு 7 மணியளவில் தவெக 108 இடங்கள் வென்றதாக அறிவிக்கப்பட்டது. அன்றைய நாள் இரவிலிருந்து மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியும் அவரது மகனும் ஒன்றுசேர்ந்து, திமுகவும் அதிமுகவும் ஒன்றிணைந்து ஆட்சியமைக்க பேச்சுவார்த்தை நடத்தினர்.அதிமுகவை எம்ஜிஆர் எதற்காக உருவாக்கினார்? அதன்பின்னர் அதிமுகவை ஜெயலலிதா எப்படி வழிநடத்தினார்? இந்த தீய சக்தி திமுகவை ஒழிப்பதற்காக உருவாக்கினர்.இன்று சி. விஜயபாஸ்கரும் எம்.ஆர். விஜயபாஸ்கரும் தவெகவில் இணைந்தபின்னர், 60 சதவிகித அதிமுகவினர் இணைந்து விட்டனர்.திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் கூடிய விரைவில் கூட்டணியை அறிவிப்பர். உள்ளாட்சித் தேர்தல் அல்லது மக்களவைத் தேர்தலில் அவ்வாறு நடக்கும்.மு.க. ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் சேரும்போது, அதிமுகவின் மாவட்டங்களில் ஒரு நிர்வாகிகள்கூட இருக்க மாட்டார்கள். எடப்பாடி பழனிசாமியும் அவரது மகனும் மட்டும்தான் கட்சியில் இருப்பார்கள்.அதிமுகவும் திமுகவும் சேர்ந்து ஆட்சியமைக்க முயன்றதாலேயே, தவெகவுக்கு ஆதரவளிப்பதாக சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி கூறினார்.இதை எதிர்ப்பதற்கு ஒட்டுமொத்த அதிமுகவினரும் குரல் கொடுத்தனர்.கரூரில் எங்களுக்கொரு கணக்கு வழக்கு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் வாழ்க்கைக்காக எங்கள் மக்களைக் கொன்று குவித்தார்கள். அதற்கான பதில் ஒரு நேரத்தில் கிடைக்கும். சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்று தெரிவித்தார்.திமுகவின் முதுகில் குத்திய வைகோ: டிடிவி தினகரன்Minister Aadhav Arjuna explains why TVK did not seek support from AIADMK in the election